Sunday, August 5, 2007

முதன்முதலாக முதன்முதலாக பரவசமாக..

நன்றி.. நன்றி ! வலைப்பதிவு பட்டறை குழுவினருக்கு! விகடன் ஆசியாலும் தமிழ் வாரமாத இதழ்களின் ஆதரவாலும் பலநூறுமுறை என் எழுத்துக்களை அச்சில் பார்க்கும் பாக்கியம் பெற்ற சிறுகதை/நாவல் எழுத்தாளனான நான் இதோ இன்னொரு பரிமாணத்துள் பரிணாமிக்கிறேன். நித்தம் நித்தம் புதிது புதிதாய் வாழும்/வாழவிரும்பும் எனக்கு இந்த புதிய 'அ.. ஆ' வலலப்பதிவு அனுபவம் புது இறக்கை பொருத்துகிறது. பரவசமாய் பறக்க்க்க்க்க்..கிறேன்.

இன்று முழுக்க இப்படியே பறக்க்க்க்க்க விடுங்களேன்.

நாளை பார்ப்போமே!
ஐஷ்வா.

10 comments:

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... வாங்க..வாங்க!

Anonymous said...

//தேசம் மொழி ஜாதி மதம் நிறம்....... எல்லாம் கடந்து மனிதனாய் வாழ்வது!

வாழ்த்துக்கள்.
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Anonymous said...

வருக. வருக. வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க....... வரவேற்கிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் ஐஷ்வா

மா சிவகுமார் said...

வாங்க ஐஷ்வா,

தமிழ்மணம் (http://www.thamizmanam.com), தேன்கூடு (http://www.thenkoodu.com), தமிழ்பிளாக்ஸ் (http://www.tamilblogs.com), போன்ற திரட்டிகளில் உங்கள் பதிவை இணைத்துக் கொண்டால், அங்கு வருபவர்கள் உங்கள் பதிவுக்கு வருவார்கள். நீங்களும் அந்தத் தளங்கள் மூலமாகவோ பிற வழிகள் (bookmarks, feed) பிற பதிவுகளைப் படித்து கருத்துக்களை வெளியிட்டு வாருங்கள். தவறாமல் புதிய இடுகைகளை அடிக்கடி போடுங்கள்.

சில வாரங்களுக்குள் பதிவுலகில் தனி இடம் பெற்று விடுவீர்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

பட்டறை மூலமாக பதிவெழுத வந்திருக்கும் முதல்? பதிவருக்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்!

MSATHIA said...

ஐஷ்வா,
பட்டறையின் பயனாக இங்கு வலைபதிய வரும் எழுத்தாளரே. வரவேற்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

-சத்தியா

Unknown said...

வாருங்கள், நண்பரே வாழ்த்துக்கள்.

Anonymous said...

முதல் பரவசத்துக்கு வாழ்த்துக்கள்! அனைவருடைய பின்னூட்டத்திற்கும் பதில் பின்னூட்டம் போடலாமே!

நாஞ்சிலான் said...

//புது இறக்கை பொருத்துகிறத//

உண்மைதான். உங்களை போல படைப்பாளிகளுக்கு ஜெட் இஞ்சினையே பொருத்திவிடும். மேலும் எதிர்பார்க்கிறேன்.